×

பாகிஸ்தான் மீது ஈரான் டிரோன், ஏவுகணை தாக்குதல்: 2 குழந்தைகள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளி குழுக்களின் தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் பலியாகினர். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் கக்காரும், ஈரான் நாட்டின் வௌியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியும் சந்தித்து பல்வேறு விவாகரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே, வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாட்டின் அலுவலகம் மீதும், வடக்கு சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத குழுக்கள் மீதும் இருதினங்களுக்கு முன் ஈரான் ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாகிப் பகுதியில் ஜெய்ஷ் அல் அடல் போராளி குழுக்களின் தளங்கள் மீது நேற்று முன்தினம் இரவு ஈரான் ஆளில்லா விமானம், ஏவுகணைகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

* ஈரான் தூதர் வௌியேற்றம்

இதனிடையே இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக ஈரான் தூதரை பாகிஸ்தான் வௌியேற்றி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வௌியுறவு செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலோச், “ஈரானின் அத்து மீறிய செயலுக்கான விளைவுகளுக்கு அந்நாடே பொறுப்பு. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் திரும்ப அனுப்பப்பட்டுள்ளார். அவர் இப்போதைக்கு பாகிஸ்தான் வர மாட்டார். இதேபோல் ஈரானிலுள்ள பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

The post பாகிஸ்தான் மீது ஈரான் டிரோன், ஏவுகணை தாக்குதல்: 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Iran ,Islamabad ,Pakistan ,Balochistan ,World Economic Summit ,Davos, Switzerland ,Interim ,Anwar ,Dinakaran ,
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...